ஞாயிறு, 29 மார்ச், 2009

திருடனே பாத்து திருந்தா விட்டால்...

பொது ஜனங்க எல்லாம் கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருக்கலாம்....ஏன்னா திருடர்கள் கூட்டுறவு சங்கங்கள் எல்லாம் ஒன்று கூடி ஒரு நல்ல முடிவை எடுத்திருக்காங்க, இனிமேல் போலிஸ்கிட்டே இருந்து மட்டும் தான் திருடோனும் என்று....கடந்த சில தினங்களாக வரும் செய்திகளை எல்லாம் பாக்கும் போது அப்படிதான் தோனுது.

நேத்து ராமசந்திரன்னு ஒரு கான்ஸடபிள், ஆவடி போலிஸ் ஸ்டேஷ்னில் வண்டியை நிறுத்தி விட்டு, கமிசனர் அலுவலகம் வரை போய் வந்திருக்கிறார். அங்கு வேலையை முடித்து விட்டு வந்து பாக்கையில் ஸ்டஷனில் நிறுத்தி இருந்த வண்டியை யாரே ஒருவர் ஆட்டையை போட்டார்.

அதேபோல், எக்மோர் போலிஷ் குவாட்டர்ஸில் இருந்து ஒரு வீட்டில் ஐந்து பவுன் நகை கொள்ளை அடிக்க பட்டிருக்கிறது. அதில் கூத்து என்னவென்றால் கனவன், மனைவி இரண்டு பேரும் காவலாளிகள். இருவரும் வேலைக்கு போயிரந்த சமயம் இது நடந்து இருக்கிறது.

இதற்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போல் ஒரு சம்பவம்.. ப்ரெண்ட்ஸ் ஆப்ஃ போலீஸ் கேள்விபட்டிருப்பீர்கள். பொதுமக்கள், தன்னார்வமாக போலிஸுடன் இனைந்து செயல்படும் ஒரு திட்டம். அப்படியாக ஒரு தொண்டர் ஒருவர் ரோந்து பணி எல்லாம் முடிந்து கிளம்பு போது, கூடவே இன்ஸ்பெக்டரின் வண்டியை தனது சேவைக்கு கூலியாக எடுத்துட்டு போயிட்டார். பாவம், இன்ஸ்பெக்டர் பஸ்ஸிலும், ஆட்டோவிலும் இரண்டு நாட்களாக சுத்தி கொன்டிருந்திருக்கிறார். இரண்டு நாட்களுக்க் பிறகு அந்த தன்னார்வம் இன்ஸ்பெக்டரை பார்க்க தனது புது பைக்கில் வந்திருக்கிறார். புதிதாக பெயின்ட் அடித்து, நம்பர் எல்லாம் மாற்றிவிட்டார். உச்சகட்டமாக, இன்ஸ்பெக்டரேயே 'வாங்க சார், ஒரு ரவுன்ட் போயிட்டுவரலாம் என்று பின்னால் உட்கார வைத்து இருவரும் சுற்றியிருக்கிறார்கள். அங்குதான் தன்னார்வத்துக்கு சூழி சுத்தியிருக்கிறது. என்னதான் இன்ஸபெக்டர்மோக்கையாக இருந்தாலும் தன் வண்டியிலேயே உட்கார வைத்து கூட்டிட்டுபோனால் தெரியாமலா போயிடும். ரவுன்ட் முடிந்து ஸ்டேஷன் வந்ததும் உள்ளேகூப்பிட்டு விசாரித்ததில், தன்னார்வம் உன்மையை க்ககியிருக்கிறார்..

மேலே குறிப்பிட்டுள்ள மூன்று சம்பவங்களையும் பாத்தீங்கன்னா ஒருதெளிவான உன்மை தெரியும்.. அது இன்னான்னா இதுக்கு முன்னாடியும் இந்த மாதிரி போலிஸ் சாமான்ன களவாடிட்டு போறது நடந்துருக்கு, ஆனா அதெல்லாம் அந்த சாமான் போலிஸ்சோடதுன்னு தெரியாமா நடந்துருக்கும...பஸ்ஸடான்ட் நிக்கிற போலிஸ்கார்ர் வண்டியை திருடிட்டு போவாங்க, பின்னாடிதான் திருடருக்கு தெரியவரும் அது போலிஸ் வண்டின்னு, ஏன்டா பொல்லாப்புன்னு எங்காவது வந்து நிறுத்திட்டு போயிடுவார்... ஆனா மேலே சொன்ன மூனு மேட்டரும், போலிஸ்னு தெரிஞ்சே திருடு போயிருக்கு... போலிஸ் குவார்ட்டர்ஸில், போலிஸ் ஸ்டேஷனில் இருந்து அடிச்சுருக்காங்க....ஏங்க இப்ப சொல்லுங்க திருடர் சங்கம் கூட்டிட்டுங்களா இல்லையா ?

வியாழன், 26 மார்ச், 2009

நான் ஏன் பிளாக் எழுதுகிறேன்

எத்தனையோ எத்தனை பிளாக்குகள்....உண்மையை சொல்லனும்னா..

ரொம்பப.... ரொம்ப
கஷ்டம்